கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்: தேதி அறிவிப்பு!
பிரதமர் மோடி கடந்த சில நாள்களாக குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில் அடுத்த கட்டமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மோடி பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த இரு மாநிலங்களிலும் அவர் வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் என்று மேடையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி அடுத்த கட்டமாக கேரளா கர்நாடக மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது