1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (11:22 IST)

விவேகானந்தர் தான் என் தூண்டுகோள், வழிகாட்டி: பிரதமர் மோடி

ஆன்மிக மறுமலர்ச்சியின் தூண்டுகோலான விவேகானந்தர் என்னுடைய வழிகாட்டியாகவும் என் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் உடலின் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை உறுதி அளிக்கிறேன்.
 
ஆன்மிக மறுமலர்ச்சியின் தூண்டுகோலான விவேகானந்தர் என்னுடைய வழிகாட்டியாகவும் என் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார். சுவாமி விவேகானந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்தபோது, ​​இந்தியாவின் மறுசீரமைப்புக்கு ஒரு புதிய திசையைப் பெற்றார்.
 
விவேகானந்தரின் லட்சியங்களைப் பின்பற்றி நமது கனவுகளின் இந்தியா வடிவம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என விவேகானந்தர் நினைவு பாறை பதிவேட்டில் பிரதமர் மோடி குறிப்பு எழுதியுள்ளார்.
 
Edited by Siva