வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (08:45 IST)

மீண்டும் மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்.. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அறிவிப்பு..!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்றும் கூறியுள்ளது. ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இழுபறியாக இருக்கும் என்றும் சில ஊடகங்கள் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக டெல்லி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சோம்நாத் பார்தி அறிவித்துள்ளார். கருத்துக்கணிப்பு முடிவுகள் முற்றிலும் தவறு என்பது ஜூன் நான்காம் தேதி தெரியும் என்றும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி தான் என்றும் கூறியுள்ள நிலையில், ஆம் ஆத்மி  வேட்பாளர், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக மாட்டார் என்று கூறி இருப்பதும் அப்படி பிரதமர் ஆனால் மொட்டை அடிப்பேன் என்று கூறி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva