வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜூன் 2024 (14:07 IST)

பிரதமர் மோடியின் திருவனந்தபுரம் பயண திட்டத்தில் மாற்றமா? என்ன காரணம்?

Modi
கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களாக தியானத்தில் இருந்த பிரதமர் மோடி தியானத்தை முடித்துவிட்டு இன்று திருவனந்தபுரத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருண்டஹ்து.
 
ஆனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பிரதமரின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், வானிலையை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாக செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
திருவனந்தபுரத்திலிருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran