வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (12:12 IST)

3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்..! அண்ணாமலை உறுதி..!!

Annamalai
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
 
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார், இது உறுதி என்று தெரிவித்தார்.

 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2047-ல் இந்தியா வல்லரசு நாடாகும் உருவெடுக்கம் என்று கூறினார்.