வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (15:57 IST)

கனிமொழியை எதிர்த்து போட்டியிட சொன்ன பாஜக.. சரத்குமார் சொன்ன பதில்..!

Sarathkumar Annamalai
சமீபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து நிலையில் அவர் இரண்டு தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. 
 
ஒன்று நெல்லை மற்றும் இரண்டு விருதுநகர் ஆகிய தொகுதியை கேட்ட நிலையில் நெல்லை தொகுதி ஏற்கனவே நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட இருப்பதால் நீங்கள் பக்கத்து தொகுதியான தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுங்கள்ம் நீங்கள் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டால் அகில இந்திய அளவில் பிரபலமாகி விடுவீர்கள் என்று பாஜக கூறியதாம். 
 
ஆனால் சரத்குமார் தூத்துக்குடியில் போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என்பதால் தூத்துக்குடியில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அதற்கு பதிலாக விருதுநகர் மற்றும் வேறு ஏதாவது தொகுதியை கொடுங்கள் என்று சரத்குமார் கேட்டதாகவும், இதற்கு பாஜக தலைமை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. 
 
எனவே சரத்குமாருக்கு ஒதுக்கப்படும் இரண்டாவது தொகுதி எது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
Edited by Mahendran