புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:12 IST)

73 ரன்களில் 5 விக்கெட்டுக்களை இழந்தது இந்திய அணி!

73 ரன்களில் 5 விக்கெட்டுக்களை இழந்தது இந்திய அணி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் குவித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது 
 
நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்து வருகிறது, மயங்க் அகர்வால், புஜாரா, கேப்டன் ரஹானே, கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஐந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன
 
இந்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து தரப்பில் டீம் செளதி மற்றும் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தற்போது 122 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது