1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (23:14 IST)

பாஜக தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

BJP Modi
சென்னையில் நடைபெற்று வரும் 44வது சேஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .

இதனை அடுத்து தொடக்க விழா நடைபெறும் இடத்துக்கு வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சென்னை ஒலிம்பியா செஸ் போட்டியை இன்று தொடக்கி வைக்க வந்த பிரதமர் மோடி தற்போது ஆளு நர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மா நில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

மேலும், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், விபி.துரைசாமி, கரு. நாகராஜன் உள்ளிட்ட  பாஜக தலைவர்களுடம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.