திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (12:19 IST)

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நல்லா இருக்காங்களா? பிரதமரின் கேள்வியால் ஆச்சரியம் அடைந்த டிஜிபி

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நல்லா இருக்காங்களா? பிரதமரின் கேள்வியால் ஆச்சரியம் அடைந்த டிஜிபி
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் சமீபத்தில் இளைஞர் ஒருவரை காப்பாற்றுவதற்காக அவரை தோளில் தூக்கி ஆட்டோ ஒன்றில் ஏற்றி வைத்தார் என்பது தெரிந்ததே
 
இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் இன்று பிரதமர் மோடி அவரை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய அளவிலான டிஜிபி மற்றும் ஐஜி மாநாடு நடந்தது
 
இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்ட நிலையில் அவரிடம் பிரதமர் திடீரென இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நல்லா இருக்காங்களா என்று கேட்க டிஜிபி சைலேந்திரபாபு பெரும் ஆச்சரியம் அடைந்தார்
 
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இளைஞருக்கு  உதவி செய்த விவகாரம் பிரதமர் அளவுக்கு தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது