1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (18:16 IST)

+2 விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் குளறுபடி: ஆசிரியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

exam
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலில் தவறு செய்த  ஆசிரியர்கள் தேர்வு துணை இயக்குனரிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ள நிலையில் அந்த ஆசிரியர்கள் உடனடியாக தேர்வு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
85 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மதிப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக ஐம்பத்தி ஐந்து மதிப்பெண் என்றும் 76 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெறும் ஆறு மதிப்பெண்கள் என்றும் ஆசிரியர்கள் தவறாக பதிவு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது 
 
மதிப்பெண் கூட்டலில் தவறு செய்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது