1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (19:28 IST)

தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேரவேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

education
தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது 
 
இது குறித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜூலை 15-ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்யஅனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வானவர்கள் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தேர்வானவர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.