திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (13:09 IST)

பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளில் பிழைகள்: முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை..!

பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளில் அதிக பிழைகள் இருந்ததை அடுத்து பிழைகள் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர். 
 
சமீபத்தில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வில் கணித பாடத்தில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது கணினி அறிவியல் தேர்வு தாளில் ஒவ்வொரு வினாவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தது. இதில் ஒரு சில வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெவ்வேறு பொருள்படும்படி இருந்ததாகவும் எழுத்துப்பிழை மற்றும் பொருள் பிழையுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் விடை எழுதுவதில் குழப்பம் அடைந்தனர். 
 
இந்த நிலையில் கணினி அறிவியல் வினாத்தாளில் உள்ள குளறுபடிகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இதற்கு அரசு தேர்வு இயக்ககம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran