வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:39 IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவர்கள்...! அதிர்ச்சி சம்பவம்..!

பிளஸ் டூ பொது தேர்வு முடிந்ததும் மாணவர்கள் வகுப்பில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் மணப்பாறையில் நடந்துள்ளது 
 
நேற்றுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் திடீரென வகுப்பறைக்குள் புகழ்ந்து வகுப்பறைகளை சூறையாடினர். 
 
வகுப்பறையில் உள்ள மின் விளக்குகள் கதவு மேஜை நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்ட விசாரணையில் 4 மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது 
 
 
அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran