ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:35 IST)

பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்: தூத்துகுடியில் பரபரப்பு..!

பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்: தூத்துகுடியில் பரபரப்பு..!
தூத்துக்குடியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் இன்று பொது தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் வாலிபர் ஒருவர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தூத்துக்குடி பகுதியில் உள்ள செக்காரக்குடி என்ற கிராமத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிட்டு மாணவி ஒருவர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்பவர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த மாணவி அந்த வாலிபரை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவி மீது சரமாரியாக சோலையப்பன் வெட்டியதை அடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இந்த நிலையில் மாணவி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மாணவியை வெட்டிய வாலிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Siva