திருச்செந்தூர் கோவில் அருகே குப்பைகளுடன் புரளும் மயில்: கோவில் நிர்வாகம் கவனிக்குமா?
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தரகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் கோவில் சந்நிதிக்கு மிக அருகில் மலை போன்ற பிளாஸ்டிக் உள்பட பிற குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
இந்த குப்பையில் தான் மயில்கள் புரண்டு வருகின்றன. இந்த மயில்கள் பிளாஸ்டிக் பொருட்களை தெரியாமல் தின்றால் அதன் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும். அதுமட்டுமின்றி இந்த குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது.
எனவே சந்ந்திக்கு எதிரே சுகாதாரத்தை மேம்படுத்தவும், இங்கு சுற்றி திரியும் அழகு மயில்களை காப்பாற்றவும், கோவில் நிர்வாகமும், அறநிலைய துறையும் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.