1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol price hike for the continuous 13th day

காஸ்ட்லி ஆன பெட்ரோல், டீசல்: இன்றைய விலை விவரம்!

#Petrol
இன்றும் 13 ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 46 காசு உயர்ந்து லிட்டர் ரூ.81.32க்கும், டீசல் 54 காசு உயர்ந்து லிட்டர் ரூ.74.23க்கும் விற்பனை ஆனது.  
 
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.01 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் (19-06-2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.81.82க்கு விற்பனை. இதேபோல டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் அதிகரித்து ரூ.74.77க்கு விற்பனை ஆகிறது. 
அடுத்த கட்டுரையில்
எனக்கு கொரோனாவே இல்ல; சாதாரண காய்ச்சல்தான்! – அமைச்சர் அன்பழகன் விளக்கம்!