1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and diesel rate today also hike

இன்று பெட்ரோலை விட அதிகமாக உயர்ந்த டீசல் விலை: பொதுமக்கள் அதிருப்தி!

பெட்ரோல்
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் 
இருப்பினும் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 27 காசுகளும் டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து உள்ளன என்பதும் பெட்ரோல் விலையை விட டீசல் விலை 5 காசுகள் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.98 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 27 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 91.98 ரூபாய் என விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் நேற்று டீசல் லிட்டர் 85.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85.63 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சானிட்டைசர் அதிகமாக பயன்படுத்தினால் கைரேகை அழியுமாம்! அதிர்ச்சி தகவல்!