டி 20 நம்பர் 1 பேட்ஸ்மேனை எடுக்க ஆளில்லை… ஆரம்ப விலைக்கே எடுத்த பஞ்சாப்!

Last Updated: வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:54 IST)

டி 20 போட்டிகளின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் டேவிட் மலானை பஞ்சாப் அணி அடிப்படை விலைக்கே எடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மலானை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் அவரின் ஆரம்ப விலையான 1.5 கோடி ரூபாய்க்கே பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் மலான் டி 20 போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.இதில் மேலும் படிக்கவும் :