புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

76 நாட்களாக உயராத பெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

கடந்த 76 நாட்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
தன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.