1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:07 IST)

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

ISRO

இந்திய எல்லைப்பகுதிகளை வான்வழியாக கண்காணிக்கவும் பாதுகாக்கவும் 150 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் நில எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செயற்கைக்கோள்களை நிறுவி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தில் இயங்கி வருகிறது.

 

தற்போது இந்திய அரசுக்காக சுமார் 70க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அவை 7500 கி.மீ பரப்பு கொண்ட இந்திய கடற்கரைகளையும், நில எல்லையையும் கண்காணிப்பதற்கு போதுமானதாக இல்லை என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பை முன்னிருத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 100 முதல் 150 புதிய செயற்கைக்கோள்களை நிறுவ உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K