குறையும் டீசல் கையிருப்பு… இலங்கையில் அடுத்து மின்சார தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு!
இலங்கையில் பொருளாதார சிக்கல் எழுந்துள்ள நிலையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கு பிறகு சுற்றுலாவை மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. மேலும் அந்நாட்டு அரசு இயற்கை உரங்களையே முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கை முடிவால் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டு பணவீக்கம் அதிகரித்தது. மேலும் விலைவாசியும் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளால் இலங்கை அரசு திவாலாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவிடம் 5 பில்லியன் டாலர் கடனுதவி கேட்டுள்ளது. அதுகுறித்து இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இப்படி பல பிரச்சனைகளில் திணறி வரும் இலங்கை அரசுக்கு அடுத்து ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசல் கையிருப்பு இன்னும் சில வாரங்களுக்கே உள்ளதாம். அதனால் விரைவில் அந்த நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு பிரச்சனை எழலாம் என சொல்லப்படுகிறது. இதனால் மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது.