1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petition to stop release NEET result until governor sign a bill

இட ஒதுக்கீடு வந்ததும் ரிசல்ட் விடுங்க.. ஆளுனர் ஒப்புதல் இல்லை! – குழப்பத்தில் மருத்துவ படிப்புகள்

Tamilnadu
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் 16ம் தேதி அதன் முடிவுகள் வெளியாக உள்ளன. முன்னதாக தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்றுவரை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மசோதாவை ஏற்று கையெழுத்திடாததால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு இந்த கல்வியாண்டில் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தள்ளாடும் திமுக; சிதறும் கூட்டணி... ஜெயகுமார் ஆருடம்!!