1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today Gold Price in Chennai decreases

ரூ.15 குறைந்தது தங்கம்: சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Price
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.    
 
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,885-க்கு விற்பனை ஆகிறது. 
அடுத்த கட்டுரையில்
ஜப்பான்ல இருந்து வரேன்.. ப்ளீஸ் ஹெல்ப்! – ஒரேயொரு பயணிக்காக திறக்கப்பட்ட சுற்றுலாதளம்!