ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு
இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு மகிந்த ராஜபக்சவின் குடும்பம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே எனக்கோ என் தந்தை மகிந்த ராஜபக்சவிற்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை என்றும் அனைத்தும் பொய் குற்றச்சாட்டுக்கள் என்றும் அதனை நேர்மையாக சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ள நிலையில் மக்களின் போராட்டம் கட்டுக்குள் வருமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாட்டை வீட்டு தப்பி ஓட முயற்சித்து வரும் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்த்ல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.