1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 மே 2022 (18:50 IST)

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

ranil
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.

நமது அண்டை நாடான இலங்கையில்  பொருளாதார நெருக்கடியால் நிலமை கையை மீறியுள்ளது.

இலங்கை முன்னாள் பிரதார் ராஜபக்சேவின் வீட்டை கொளுத்திய சிங்களர்கள், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களை  அடித்தனர். இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தள்ளது.

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று, நடத்த தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபர் கோத்தபய ராஜபக்சேவ்வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், 4 நிபந்தைகளுடன் தான் ஆட்சிப் பொறுப்பேற்க தயார் என தெரிவித்தார்.

இலங்கையின் புதிய பிரதமராக ரப்ணில் விக்ரமசிங்கே  இன்று மாலை பதவி ஏற்க உள்ளதாகவ தகவல் வெளியான நிலையில், சஜித் பிரேமதாசாவும் பதவி ஏற்க தயார் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;இந்த நிலையில், தற்போது, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். ஏற்கனவே  இவர் இலங்கையில் 5 முறை பிரதமராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுல கட்சி ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவியேற்க ஆதரவு அளித்துள்ளது. மேலும், ரணில் தலைமையில் ஒரு மாதம் கூட ஆட்சி நீடிக்காது என ஜேவிபி விமர்சித்துள்ளது.,