திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 மே 2022 (19:58 IST)

ரணில் விக்ரமசிங்கே பிரதமரானது இந்தியாவின் முயற்சியா?

Ranil Wickramasinghe
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக சற்றுமுன்னர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இலங்கை பிரதமரை தேர்வு செய்யும் பணியில் கோத்தபய ராஜபக்சே இருந்தபோது ரணில் விக்ரமசிங்க தான் அடுத்த பிரதமர் என இந்தியாவிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சாய்ஸ் ரணில் விக்ரமசிங்கே தான் இருந்தது என்றும் கூறப்படுகிறது 
 
இலங்கைக்கு ஏராளமான உதவிகளை செய்து வரும் இந்தியாவின் ஆலோசனையை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் பதவி கொடுக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது