செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (19:31 IST)

ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் பணியிடை நீக்கம் !

punjab
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் மொபைல் கடையில் பணியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் அமிர்தரசில் உள்ள  ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த  புதன் கிழமை இந்தக் கடைக்குள் சென்ற போலீஸ் காரர் ஒருவர், தன் கைத்துப்பாக்கியை எடுத்து, அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர், இன்னொரு நபரையும் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். முதலில் சுட்ட நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருப்போர் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மற்றும் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த நபர்களின் குடும்பத்தின் வாக்குமூலத்தின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்படுவதாக அமிர்தரஸ் வடக்கு ஏசிபி வரீந்தர் சிங் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

Edited by Sinoj