புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய், சந்திர சூட்டை நியமிக்க தடை கோரிய மனு தள்ளுபடி!
உச்ச நீதின்ற தலைமை நிதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கத் தடை கோரிய மனு தள்ளு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி யுயு.லலித்தின் பதவிகாலம் வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முடிகிறது.
எனவே, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய், சந்திர சூட்டை நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டதற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அக்டோபர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
உச்ச நீதின்ற தலைமை நிதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கத் தடை கோரி வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த விசாரித்த தலைமை நீதிபதி யுயு.லலித், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50 வது நீதிபதியாக நீதிபதி டி-ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.
Edited by Sinoj