வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (23:23 IST)

பள்ளியில் மதுவிருந்து பார்ட்டி வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

பள்ளியில் மதுவிருந்து வைத்து அசைவ உணவுகள் வழங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக  ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள போட்டா என்ற கிராமத்தில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியர் தன்  நண்பர்களுடன் பார்டி நடத்தியதாகவும்,  அப்போது, மதுவிருந்து மற்றும் அசைவ உணவுகள் வழங்கியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, அங்குள்ள வட்டார அதிகாரியும் ஆர்.ஐயும் விசாரித்து  அறிக்கை அனுப்பியுள்ளனர்.


இதனடிப்படையில், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகிறது.
 
Edited by Sinoj