வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 2 மே 2020 (21:56 IST)

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதி…

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள், கேளிக்கை கூடங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்கிறது. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கும் தடை நீட்டிக்கப்படுகிறதுஎன தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின்வணிக நிறுவனங்கள் (e-Commerce) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம். உணவகங்களில் காலை 6மணி முதல் இரவு 9 வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின் படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, (Except Containment Zones) பிற பகுதிகளில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.