வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (21:07 IST)

ஏழைகளுக்கு உணவு வழங்க அனுமதி – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு நேற்று தடை விதித்திருந்த நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ஆன்ணையர், ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் 24 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளதாவது :

சென்னையில் ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் 24 மணி நேரத்திற்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

 சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அலுவலர்கள் முன்னிலையில் தான் உணவு, மளிகை, மருந்துகளை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு, உணவு வழங்கும்போது எந்த ஒரு அமைப்பு, அரசியல் கட்சி என எந்த விளம்பரத்தையும் பயன்படுத்த கூடாது என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் வீட்டைவிட்டு வெளியேறினால் கட்டாயன் மாஸ்க் அணிந்துதான் செல்லவேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.