வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (14:21 IST)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் - நீதிபதி கூறிய காரணம்

மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழகில் கைதான இளைஞருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

26 வயது இளைஞர்  ஒருவர், 13 வயது சிறுமியுடன் பழகி வந்த   நிலையில், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து,  பல நட்கள் இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் இவர்கள் இருவருக்கும் இடையே பாலியல் உறவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் நடந்து வரும் நிலையில், சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுகுறித்து நீதிபதி ஜோஷி பால்கே கூறியதாவது: இருவரும் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பாலியல் உறவு, காதலால் நிகழ்ந்ததே தவிர, காமல் காரணமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.