1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (21:03 IST)

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாது: பாஜக மேலிடம்...

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என தெரிவித்தது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்த சிலறும் இதனை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். இதை தவிர்த்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம், சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. 
 
மேலும், பெரியார், அம்பேத்கர், பாஜக தலைவர் ஆகியோரின் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி அதிருப்தியை தெரிவித்தார். 
 
பல விமர்சனங்கலை தொடர்ந்து, எச்.ராஜா இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் வன்முறையை தூண்டும் விதமாக பேசும்  இவர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்தது. 
 
இந்நிலையில், எச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா? என அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமித்ஷா, எச்.ராஜா மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.