1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (09:03 IST)

அஜித், விஜய்க்கு இல்லாத தைரியத்துடன் ஜிவி பிரகாஷ்

நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எச்.ராஜாவுக்கு அவரது சொந்தக்கட்சியில் இருந்தே கண்டனங்கள் எழுந்ததால் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். இருப்பினும் அவர் மீதான விமர்சனங்கள் இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

இருப்பினும் எச்.ராஜாவுக்கு அஜித், விஜய் உள்பட எந்த ஒரு பெரிய நடிகரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. கமல், குஷ்பு ஆகியோர் அரசியல் கட்சியில் இருப்பதால் அவர்கள் மட்டும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் எச்.ராஜாவுக்கு தனது கண்டனத்தை தைரியமாக பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் 'பெண்ணடிமையை, சாதியை, மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்.! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது..! என்று கூறியுள்ளார்.