செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:13 IST)

இது தான் "தலைவர் 168" டைட்டில்...? தீயாக பரவும் லேட்டஸ்ட் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு என இரண்டு 80ஸ் கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரஜினியின் தங்கையாக  கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்திருந்தது. 
மேலும் இப்படத்தில் ரஜினியின் மச்சானாக, கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக நடிகர் சித்தார்த்தை நடிக்க வைக்க படத்தின் இயக்குனர் சிவா பேச்சு வார்த்தை நடத்தியாக கூறப்பட்டது. இப்படி படத்தை குறித்த தகவல்கள் தினம் தினம் வெளிவந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. 
 
அதாவது, இப்படத்திற்கு "அண்ணாத்தே" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாவில்ல்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.