வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (13:56 IST)

கடற்கரையில் சுறா தாக்கி இளைஞர் பலி

அமெரிக்காவின் மசசூசட்ஸ் கடற்கரையில் சுறா மீன் தாக்கியதில் 20 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நியூ கோம்ப் ஹாலோ கடற்கரையில் நடந்தது.
 
தண்ணீரில் இருந்து அந்த நபரை வெளியே இழுத்து முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால், படுகாயமடைந்ததில் அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக வெல்ஃப்ளீட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
1936 ஆம் ஆண்டுக்கு பிறகு சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். சுறா தாக்கியபோது அவர் சர்ஃபிங் செய்து கொண்டிருந்ததாக ஏபி செய்தி முகமை கூறுகிறது.
 
உயிரிழந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும், அவரது குடும்பத்தாருக்கும் இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் உள்ள கடற்கரைகள் அனைத்திலும் நீச்சலடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சுறா தாக்கிய காட்சி, மோசமான கனவு போல இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். 15 அடி உயரத்திற்கு தண்ணீர் மேல் எழும்பியது. அதன் வாலை பார்த்தேன். பின் அது மீண்டும் தண்ணீருக்குள் சென்றது என்று அவர் விவரித்தார்.
 
அங்கு இருந்த நபருக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் தெளிவாக தெரிந்தது என்றும் அவர் கூறினார். கேப் காடில் இந்தாண்டு சுறாக்களை காண்பது அதிகரித்துள்ளது.
 
கடந்த ஆகஸ்டில் 61 வயது நரம்பியல் மருத்துவரான வில்லியம் லைடன் இதே போல சுறாவால் தாக்கப்பட்டார். அதுவும் தற்போது நடந்த இடத்திற்கு ஆறு மைல்களுக்கு அருகே அவர் தாக்கப்பட்டார்.