ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (10:48 IST)

பெரிய பாண்டி பலியான விவகாரம் - ராஜஸ்தானில் குற்றவாளிகள் கைது?

தமிழக காவல்துறை அதிகாரி பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் குற்றவாளிகளை அந்த மாநில போலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
கொளத்தூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நாத்துராம்(25) மற்றும் தினேஷ் சவுத்திரி(17) ஆகிய இருவரையும் அதிகாலை 3 மணியளவில் பிடித்த பெரிய பாண்டி பிடித்து காரில் ஏற்றும்போது, பெரிய பாண்டியனிடம் இருந்த கைத்துப்பாக்கியை பிடிங்கி நாத்துராம் அவரையும், முனிசேகர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியையும் சுட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.
 
அந்நிலையில், பெரிய பாண்டியனை சுட்டுக்கொலை செய்த நாத்துராம், தினேஷ் சவுத்திரி ஆகிய இருவரையும் ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
பெரிய பாண்டியனின் உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று கொண்டு வரப்படுகிறது. சென்னையில் பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் விமானம் மூலம் மதுரைக்கும் அங்கிருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கும் பெரியபாண்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.