1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:55 IST)

26 வருடங்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் பரோலில் இன்று வெளியே வந்துள்ளார்.



 
 
பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இன்று பேரறிவாளன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன்  வேலூர் சிறையில் இருந்து திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
 
திருப்பத்தூரில் உள்ள அவருடைய வீட்டில்தான் தங்கியிருக்க வேண்டும், பத்திரிகை, டிவிகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்பது உள்பட ஒருசில நிபந்தனைகள் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.