1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (21:38 IST)

தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸாகுதுனு தெரியுமா?

வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படங்கள் என்னென்ன என்று தெரியவந்துள்ளது.


 
 
தீபாவளிக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், என்னென்ன படங்கள் ரிலீஸாகப் போகின்றன என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
அட்லீ இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ ரிலீஸாவது என்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருப்பதால், வேறெந்த பெரிய படமும் தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.
 
ஆனால், விக்ரம் நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ படம் தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். அத்துடன், பிரபுதேவா – ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’, அர்ஜுன் இயக்கத்தில் அவருடைய மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லிவிடவா’, சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஹர ஹர மஹாதேவஹி’ ஆகிய படங்களும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
 
ஆனால், சென்சார் விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், சென்சார் ஆன பிறகே எந்தெந்தப் படங்கள் ரிலீஸ் என்பது முடிவு செய்யப்படும்.