வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (16:10 IST)

விஜய்யுடன் மோதும் பிரபு தேவா?

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்துடன் பிரபுதேவா நடிக்கும் குலேபகாவலி படம் மோதும் என செய்திகள் வெளியாகின்றன.


 
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல். இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
 
பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் குலேபகாவலி படத்தை கல்யாண் இயக்குகிறார். பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். பிரபுதேவா இந்தப் படத்தில் ஏகப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் இரு படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மெர்சல் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
விஜய் படத்திற்கு போட்டியாக தனது படத்தை பிரபு தேவாவும் தனது படத்தை தீபாவளி அன்று வெளியிடவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.