வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (08:45 IST)

ஜனவரி 5ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: கொறடா அறிவிப்பு!

ஜனவரி 5ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தலைமை கொறடா அறிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இதற்காக கலைவாணர் அரங்கம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரை அடுத்து எம்எல்ஏக்கள் அனைவரும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.