’திமுக செய்த தவறை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ
’திமுக செய்த தவற்றை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை மாநகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட செல்லூர் ராஜூ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது :
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டு வருகிறார். திமுக செய்த தவற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அதிமுகவுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு ; சட்டமன்ற தேர்தல் என்பது வேறு, திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க முடியாது.
திமுகவால் பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள்... திமுக எப்போதும் தமிழகத்தின் எதிர்க்கட்சியாகவே தொடரும் என தெரிவித்தார்.