திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (08:10 IST)

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
94 வயதான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக சில மாதங்களாக  நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு அவ்வப்போது மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு க.அன்பழகன் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
 
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து உடனடியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.