வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (12:58 IST)

விஜய் ஸ்டைலில் கோல்ட் ரிங் பரிசளித்த அமைச்சர் ஜெயகுமார்!

அமைச்சர் ஜெயகுமார் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்டு பரிசளித்தளித்து உள்ளார். 

 
இன்று மறைந்த ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பங்காக சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த ஏழு குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்து பரிசுப்பொருட்களை வழங்கினார்.
 
வழக்கமாக நடிகர் விஜய், தனது பிறந்தநாளன்று தங்க மோதிரத்தை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இதேபோன்று இன்று செய்துள்ளார்.