திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (20:09 IST)

ஸ்டாலின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் - முதல்வர் பழனிசாமி

வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி  தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, இன்று வேலூர் தொகுதி வேட்பாளர் எசி சண்முகத்திற்கு ஆதரவாக வாணியம்பாடியில்  பரப்புரை செய்தார். அதில் திமுக மத்தியிலும் ஆட்சியில் இல்லை ; மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. அவர்கள் இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று  தெரியவில்லை. அக்கட்சியினர் பொய் வாக்குறுதி என்ற வாக்குறுதியை கொடுத்து தேர்தலில் வென்றுள்ளனர்.
 
ஸ்டாலின்,,அரசின் திட்டங்கள் என்ன தெரியாமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார். அவரால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கமுடியாது. ஆட்சி அமைக்க வேண்டுமென்ற ஸ்டாலின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.