புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (18:27 IST)

நண்பன் காதலியின் தோழியை கர்ப்பமாக்கிய வாலிபர்..

வேலூரில் நண்பன் காதலியின் தோழியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீஸ் தேடி வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில், பிரம்மபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ், மாட்டு வண்டி ஓட்டி வருகிறார். இவரது நண்பர் ஒருவர் ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தனது காதலியை சந்திக்க செல்லும் நண்பருடன், சந்தோஷும் செல்வது வழக்கம்.

அப்போது அவரது நண்பரின் காதலி, 20 வயதுடைய ஒரு பெண்ணை சந்தோஷுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார். இதையடுத்து சந்தோஷ் அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் சந்திப்பது வழக்கமாகியுள்ளது. மேலும் சந்தோஷ், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசையை மூட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் அந்த பெண் 7 மாத கர்ப்பிணியானார். அதன் பின் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சந்தோஷை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சந்தோஷ் அதன் பிறகு தலைமறைவானார். இது குறித்து காட்பாடி போலீஸில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்.