வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (09:31 IST)

சுயேச்சை வேட்பாளருக்கு அமமுக-வின் பரிசு பெட்டக சின்னம்: தினகரன் ரியக்‌ஷன் என்ன?

வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
வேலூர் தொகுதியில் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தலை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். 
 
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமியும் போட்டியிடுவார் என அக்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தினகரனின் அமமுக கட்சி வேலூர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். 
 
தினகரனின் அமமுக கட்சிக்கு சமீபத்தில் நடந்த 38 தொகுதி மக்களவை மற்றும் 18 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. இந்த சின்னத்தை டிடிவி தினகரன் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது இந்த சின்னம் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தினகரன் பேசுவாரா? இல்லை கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் நிச்சயம் ஒரு சின்னம் கொடுக்கப்படும் எனவே இதை இப்படியே விட்டுவிடுவோம் என நினைக்கிறாரா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.