வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (16:06 IST)

கரூரில் ஆரம்பித்தது வேட்பாளருக்கு எதிரான போராட்டம் !

காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதிக்கு ஜோதிமணியை தவிர வேறு யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வேலை செய்ய தயார் என்று அக்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக அளவில் கரூர் மாவட்டம் என்றாலே ஆன்மீகம் மற்றும் பண்டைய வரலாறு ஆகியவற்றைகளுடன், வணிக ரீதியாகவே மிகவும் பெயர் பெற்றது. தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழலில், மறுமலர்ச்சி தி.மு.க கட்சியே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தான் உருவானது, அப்படிபட்ட அரசியல் களத்தில், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதி தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளனர். இதனையடுத்து ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், அதே நேரத்தில், செல்வி ஜோதிமணிக்கு தர இருப்பதாகவும், கூறி ஊடகங்களில் செய்தி வெளி வருகின்றது.

இந்நிலையில், ஏற்கனவே, சட்டமன்ற தொகுதியிலும், பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்ட, ஜோதிமணி, தனது சொந்த பூத்திலேயே 900 வாக்குகள் இருக்கும் பட்சத்தில் வெறும் 9 வாக்குகளே பெற்றதும், ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக பணிபுரிந்து கூட்டணி தர்மத்தினையும், கட்சியின் கொள்கையையும் அடகு வைத்தவர் தான் ஜோதிமணி என்றும் ஆகவே கட்சி தலைமை யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுக்க வேண்டுமென்றும் ஜோதிமணிக்கு மட்டும் கூடாது என்றும் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தற்போது காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளர் யார் என்று அதிகார பூர்வ வேட்பாளர் என்பது தெரியாத நிலையில், செல்வி ஜோதிமணி தான் வேட்பாளரா என்றும், அவருக்கு எதிராக தற்போதே கோஷ்டி பூசல் ஏற்பட்டடு வருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி என்றாலே தமிழக அளவில் கோஷ்டி பூசலின் கூடாராமாக விளங்கிய நிலையில், தற்போது மேலும், அறிவிக்கப்படாத வேட்பாளர், ஜோதிமணி என்று அறிவித்தால் மேலும், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடும் என்று தொண்டர்கள் ஒருமித்த கருத்தாக தெரிவித்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார்