1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:34 IST)

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்த தலைமை ஆசிரியர் - குவியும் பாராட்டுகள்

இந்தக் கொரொனா காலத்தில் வரும் 31 ஆம் தேதி வரை 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வாழியாக அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஏழை எளிய மாணவர்களால் ஸமார்ட் போன் பயன்படுத்த முடியாதநிலையில் அவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளமுடிவதில்லை என பலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர்களை ஊக்கப்படுத்தும்  வகையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு சொந்த செலவில் மொபைல் போன் வாங்கிப் பரிசளித்துள்ளார் பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயக்குமார்.

இந்தப் பள்ளி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தன் பட்டி ஊராட்சி தொடக்கி ஆகும் .

தலைமை ஆசிரியர் ஜெயக்குமாருக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.