1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:28 IST)

கைக்குழந்தையோடு பிக்பாஸ் கவின்…. வைரலாகும் ‘டாடா’ பட போஸ்டர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த கவின் இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் அடுத்து நடித்த லிப்ட் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் வைரலாக ஹிட்டானது.

லிப்ட் படத்துக்குப் பிறகு கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. டாடா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

கைக்குழந்தையோடு கூட்டத்தில் கவின் நிற்பது போல உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.